திருத்தணியில் இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் இன்று அதிகாலை முருகூர் பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் கரும்பு டிராக்டர் சர்க்கரை ஆலையை நோக்கி வந்து கொண்டிருந்தது. டிராக்டர் பின்புறம் அகூர் கிராமத்தைச் சேர்ந்த சமோசா வியாபாரி முருகன் (வயது 38) வியாபாரத்திற்காக சென்று கொண்டு இருந்தார்.
அப்பொழுது அவர் பின்னால் வந்த இருசக்கர வாகனம் திடீரென்று கடும் வேகத்தில் சமோசா வியாபாரி முருகனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால் நிலை தடுமாறி சமோசா வியாபாரி முருகன் கரும்பு டிராக்டர் மீது விழுந்தார். இதில் டிராக்டரின் சக்கரத்தில் சிக்கிய முருகன் மீது டிராக்டர் ஏறியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நெற்பயிர்கள் கருகும் அபாயம்; மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க ராமதாஸ் கோரிக்கை
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய பைக் ஓட்டுநரும், டிராக்டர் ஓட்டுநரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவத்திற்கு காரணமான இருசக்கர வாகன ஓட்டி மற்றும் கரும்பு டிராக்டர் ஓட்டுநர் ஆகியோர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் யார்? இவர்கள் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் உயிரிழந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.