திருத்தணியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் உடலை ஊருக்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணி நகராட்சியில் கம்பர் தெரு சுப்பிரமணிய நகர் பகுதியில் வசிப்பவர் கட்டிட மேஸ்திரி குமார். இவரது மனைவி ரெஜினா (வயது 43). இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு திருத்தணியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டு காய்ச்சல் தீவிரமடையவே மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் திருத்தணி தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி கொரோனா நோய் தொற்று தீவிரமடையவே ரெஜினா இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து அவரது பிரேத அறிக்கையில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இறந்து விட்டதாக மருத்துவமனை சான்று அளித்துள்ளனர். இவரது உடலை ஆம்புலன்சில் திருத்தணி நோக்கி எடுத்து வந்தனர். அப்பொழுது அவர்களை வழிமறித்த உறவினர்கள் உயிரிழந்தவரின் உடலை ஊருக்குள் எடுத்து வரக்கூடாது நேரடியாக சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று புதைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சுத்தம் செய்யும்போது வெடித்த துப்பாக்கி; ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பலி - மதுரையில் பரபரப்பு
மேலும் உயிரிழந்தவரின் உடலை ஊருக்குள் எடுத்துவர எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நேரடியாக சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள் ஊருக்குள் எடுத்து செல்ல அனுமதி இல்லை என்று கூறியதால் ரெஜினாவின் உறவினர்கள் கிறிஸ்தவ முறைப்படி கல்லறைக்கு எடுத்துச் சென்றனர். கொரோனா விதிகளின்படி திருத்தணி நகராட்சி சார்பில் ரெஜினாவின் உடலை நல்லடக்கம் செய்தனர்.
திருத்தணி நகராட்சி பகுதியில் தொடர்ந்து பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் காய்ச்சல் முகாமும் நடத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் திருத்தணியில் கட்டிட தொழிலாளியின் மனைவி கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்த சம்பவம் திருத்தணியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.