திருவள்ளூரில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

By Velmurugan s  |  First Published Dec 16, 2023, 8:11 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜீவா. இவர்களுக்கு விஸ்வா (வயது 12), சூர்யா (10) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். 

விஸ்வா 7ஆம் வகுப்பும், சூர்யா 6ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இதனிடையே நேற்று முதலே சோழவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலையும் விட்டுவிட்டு மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை சிறுவர்கள் இருவரும் அருகில் உள்ள மோட்டார் பம்ப்செட்டிற்கு சென்றபோது அங்கிருந்த இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்வது தெரியாமல் அந்த இரும்பு குழாயை தொட்டுள்ளனர். 

Tap to resize

Latest Videos

விலைவாசி உயர்வால் ஏற்கனவே மக்கள் நெருக்கடியில் வாழ்கின்றனர் இதில் மின்கட்டண உயர்வுமா? சீமான் கண்டனம்

இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்கள் இருவரது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!