நீர் ஆதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒழித்தால் மட்டுமே பாதிப்புகளை தடுக்க முடியும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி, துணி நூல் துறை அமைச்சர் காந்தி, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திருவள்ளூர் மாவட்டத்தில் ராமஞ்சேரி, திருக்கண்டலம் ஆகிய பகுதிகளில் இரண்டு பெரிய ஏரிகளை கட்டினால் கொசஸ்தலை ஆற்றில் வரும் தண்ணீரை நிறுத்தி வைக்கலாம் என்று முடிவு செய்தால், அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை.
இதனால் அந்த முடிவு அப்படியே நிலுவையில் உள்ளது. கடந்த ஆட்சியில் திருக்கண்டலம் பகுதியில் ஆற்றிலேயே குட்டை போல் ஒன்றை கட்டியிருக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் நிரந்தரமாக மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்பை தடுக்க வேண்டுமானால் ராமஞ்சேரி மற்றும் திருக்கண்டல பகுதியில் பெரிய ஏரி அமைக்க முதல்வரிடம் பேசுவேன்.
அனைத்து பகுதிகளிலும் தொழிற்சாலை வைப்பவர்கள் கழிவுகளை எடுத்து வந்து நீரில் விட்டு விடுகின்றனர். எங்களால் முடிந்தவரை கூறுகிறோம். யாரும் கேட்பதில்லை, அதற்கு பல்வேறு இலாகாக்கள் உள்ளன. இரவில் கழிவு நீரை திறந்து விடுகின்றனர். தற்போது சென்னையில் எங்கும் மழை நீர் தேங்கவில்லை. நீர் முழுமையாக வடிந்து சுத்தமாக உள்ளது என்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் காந்தி, கடந்த ஆட்சியில் 8 ஆயிரம் கோடி செலவு செய்தார்கள். தற்போது 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததால் தான் மழைநீர் சென்னையில் நிற்கவில்லை என பதிலளித்தார்.