கொட்டும் கனமழை.. திருவள்ளூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு !!

By Raghupati R  |  First Published Nov 14, 2023, 10:49 PM IST

கனமழை காரணமாக திருவள்ளூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.


வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. மேலும் நாளையும் சென்னையில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. 

இதில் கூறப்பட்டுள்ளதாவது, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர குடிநீர் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரை அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும்.

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. மேலும் நாளையும் சென்னையில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில்‌ வடகிழக்கு பருவமழை தீவிரம்‌ அடைந்துள்ள நிலையில்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ கணமழை முன்னெச்சரிக்கை மற்றும்‌ நிவாரண நடவடிக்கைகள்‌ குறித்து முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில்‌ ஆய்வு மேற்கொண்டார்.  இந்த நிலையில் கனமழை எதிரொலியால் திருவள்ளூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா

click me!