சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக உயர்கல்வித்துறை குழு ஒன்றை அமைத்தது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் கணிப்பொறி, இணைய உபகரணங்கள் வாங்குவதில் நிதி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் ஆதி திராவிட இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் முறைகேடு, அவுட்சோர்சிங் பணிகளுக்கான ஆள் தேர்வில் மோசடி என பதிவாளர் தங்கவேலு மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகள் குவிந்தன.
undefined
இதையும் படிங்க: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறல்- இண்டர்போல் உதவிய நாடும் போலீஸ்
இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உயர் கல்வித்துறை அரசு கூடுதல் செயலாளர் பழனிசாமி மற்றும் அரசு இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அதில், அக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கணிப்பொறி, இணையம் மற்றும் உபகரணங்கள் கொள்முதலில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணமானது.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதோ பெரிய லிஸ்ட்..!
முறைகேடு புகார்கள் நிரூபணமானதை அடுத்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்ய பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பதிவாளர் தங்கவேலு பிப்ரவரி 29ம் தேதி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.