சேலம் மாநகராட்சி மேயரின் மருமகள் சுதாவிற்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் உடல் நிலை மோசமடைந்ததால் அங்கிருந்து சேலம் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சேலம் மாநகராட்சி மேயரின் மருமகள் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக அவருடைய உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், எந்த விசாரணைக்கும் தயார் என மேயர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சார்ந்த ராமச்சந்திரன் இருந்து வருகிறார். இவரது இல்லம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ளது. இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், சுதர்சன் பாபு என்ற மகனும், சுமித்ரா என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் சுதர்சன் பாபுவின் மனைவி சுதா. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த தம்பதிக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது.
undefined
இதையும் படிங்க: இதெல்லாம் தமிழகத்தின் சாபக்கேடு! அரசே மது விற்கும் அவலத்தால் 100க்கும் மேற்பட்ட கொலைகள்! லிஸ்ட் போட்ட பாஜக!
இந்நிலையில் சுதாவிற்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் உடல் நிலை மோசமடைந்ததால் அங்கிருந்து சேலம் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அங்கு சுதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சுதாவின் இறப்புக்கு குறித்து தகவலறிந்த அவரது பெற்றறோர் மற்றும் உறவினர்கள் சுதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கணவர் சுதர்சன் பாபு வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு சுதாவை உணவு அளிக்காமல் கொடுமைப்படுத்தி வந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். சுதாவின் சகோதரர் பரமசிவம் சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சுதா உயிரிழப்புக்கு காரணமாக மேயர் ராமச்சந்திரன், அவருடைய மனைவி, மகன் மற்றும் மகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சுதர்சன் பாபுவின் திருமணத்துக்குப் பின்னர், அவர்களுக்கு எந்த குறையும் வைக்காமல் பார்த்துக் கொண்டேன். எனது மருமகளுக்கு உடல்நிலை சரியில்லாத போது சேலம் தனியார் மருத்துவமனையில் அவ்வபோது சிசிச்சை பெற்று வந்தார்.அவருக்கு, வெற்றிலை பாக்கு பழக்கம் இருந்தது. ஆகையால் உடல்நிலை மோசமடைந்தது.
இதையும் படிங்க: இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகுதாம் மழை.. வானிலை மையம் தகவல்.!
நானும் பொதுவாழ்வில் இருப்பதால் தனியாகவே இருந்து வந்தேன். எனது மருமகளின் குடும்பத்தினர் எனது பொது வாழ்விற்கும் நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தவறான செய்தி பரப்புகிறார்கள் இதை பொருத்த வரை எந்த விசாரணைக்கும் முழு ஒத்துழைப்புக்கு நானும் எனது குடும்பமும் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.