இதெல்லாம் தமிழகத்தின் சாபக்கேடு! அரசே மது விற்கும் அவலத்தால் 100க்கும் மேற்பட்ட கொலைகள்! லிஸ்ட் போட்ட பாஜக!

மதுவை, அரசே விற்கும் அவலம் தான் தமிழகத்தின் சாபக்கேடு. பல இளம் விதவைகள், பெற்றோரில்லா குழந்தைகள் உருவாகிக்  கொண்டேயிருக்கிறார்கள். டாஸ்மாக்கிலிருந்து வாங்கி அருந்தும் மதுவிற்கு பலியாவது பெரும்பாலும் சராசரியாக 30-45 வயது உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

All this is the curse of Tamil Nadu! More than 100 murders due to government selling alcohol! Narayanan Thirupathy tvk

முறைப்படுத்த வேண்டியதை முறைப்படுத்த முயலாமல், முறைப்படுத்தக் கூடாததை முறைப்படுத்திக் கொண்டிருப்பது தான் திராவிட மாடலா? என நாராயணன் திருப்பதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: மது அருந்த பணம் தராத தந்தை கொலை; பட்டதாரி இளைஞர் கைது : 24/02/2022.
மது போதையில் தந்தையை கீழே தள்ளிவிட்டு கொன்ற பாசக்கார மகன் கைது : 16/03/2022.
இரண்டு மகள்கள் அடித்து கொலை : குடிகார தந்தையின் வெறிச்செயல் : 20/05/2022.
மது போதையில் அடித்து துன்புறுத்திய தந்தை : டாக்டர் மகள் தற்கொலை : 29/011/2022.
மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் தாயை கொன்று புதைத்த மகன் கைது : 09/11/2022.
மது போதைக்கு அடிமையான வாலிபர் கொலை, பாசக்கார தம்பி, தந்தை கைது : 09/11/2022.

மது பழக்கத்தினால் மனைவி பிரிந்ததால், சோற்றில் விஷம் வைத்து தாய், தந்தையை கொலை செய்த மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை. போதையில் குழந்தையை சுவரில் வீசி கொலை செய்த கொடூர தந்தை : 05/01/2023. 
குடிகார மகனை குடும்பமே அடித்து கொன்றது : 08/03/2023.
மதுரையில் மது போதையால் ஆள்மாற்றி கொலை செய்த இருவர் கைது : 26/10/2023.
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் குடிபோதை விபத்து, கொலைகளில் 20 பேர் பலி : தீபாவளி வியாபாரம் அமோகம் : 15/11/2023.

வயலில் மது அருந்தியதை தட்டி கேட்ட விவசாயி கொலை : 5/01/2024.
சொத்துக்காக தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன் - 11/01/2024.
மது விற்பனையில் தகராறு : கத்தியால் குத்தி ஒருவர் கொலை. 17/01/2024.
மது பாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தி கொலை செய்த மகன், தாயின் மீது சந்தேகப்பட்டு கொலை : 19/01/2024.
மது போதையில் ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளி கர்ப்பிணி கொலை : கணவன் கைது: 28/01/2024.
மது போதையில் இளைஞர் கொலை : நண்பர் கைது 30/01/2024.

இதையும் படிங்க: கோபாலபுரத்தில் ஆரம்பிக்கும் குடும்ப ஆட்சி தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் பரவியுள்ளது - அண்ணாமலை விமர்சனம்

கடந்த இரு வருடங்களில் நடைபெற்ற நூற்றுக்கணக்கான  கொலைகளில் ஒரு சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன். ஆனால், இந்த படுகொலைகளுக்கு காரணமான மதுவை, அரசே விற்கும் அவலம் தான் தமிழகத்தின் சாபக்கேடு. பல இளம் விதவைகள், பெற்றோரில்லா குழந்தைகள் உருவாகிக்  கொண்டேயிருக்கிறார்கள். டாஸ்மாக்கிலிருந்து வாங்கி அருந்தும் மதுவிற்கு பலியாவது பெரும்பாலும் சராசரியாக 30-45 வயது உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த கொலைகளை தடுத்து நிறுத்த முடியாதவர்கள், முயற்சிக்காதவர்கள், நீட் தேர்வுக்கேற்ற முறையான, தரமான கல்வி முறையை அளிக்காத காரணத்தினாலும், மன அழுத்தத்தினாலும் நடைபெறும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டிய முயற்சிகளை செய்து இந்தியா முழுவதும் தமிழக மாணவர்கள் மருத்துவ கல்லூரி பயில்வதற்கு உண்டான வழிமுறைகளை செயல்படுத்தாமல்,  நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று கூக்குரலிடுவது கண்டிக்கத்தக்கது. முறைப்படுத்த வேண்டியதை முறைப்படுத்த முயலாமல், முறைப்படுத்தக் கூடாததை முறைப்படுத்திக் கொண்டிருப்பது தான் திராவிட மாடலா? செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும். என்ற வள்ளுவரின் வாக்கை நினைவில் கொண்டு செயல்படுவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:  School College Holiday: பிப்ரவரி 2ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios