#BREAKING: தனியார் பேருந்து மோதி விபத்து! கர்ப்பிணி உட்பட 4 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு!

By vinoth kumar  |  First Published Jun 12, 2024, 12:37 PM IST

சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் அருரில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரிக்கு பின்னால் இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு வண்டிகளிலும் கணவன் மனைவி குழந்தைகளுடன் வந்தவர்கள் மீது ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் இருந்து சேலம் நோக்கி வந்த சண்முகா என்கிற தனியார் பேருந்து மோதியது. 

சேலம் அருகே 2 பைக்குகளில் காத்திருந்தவர்கள் மீது தனியார் பேருந்து மோதியதில் கர்ப்பிணி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தனர். 

சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் அருரில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரிக்கு பின்னால் இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு வண்டிகளிலும் கணவன் மனைவி குழந்தைகளுடன் வந்தவர்கள் மீது ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் இருந்து சேலம் நோக்கி வந்த சண்முகா என்கிற தனியார் பேருந்து மோதியது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: Today Gold Rate In Chennai: மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. கிடுகிடு உயர்வால் அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

இந்த விபத்தில் கர்ப்பிணி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும், தனியார் பேருந்தில் இருந்த 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: தப்பி தவறி கூட கடல்ல கால வச்சுடாதீங்க! இந்த 4 மாவட்டங்களில் சுனாமி போல் தாக்குமாம்! சென்னையில் நிலை என்ன?

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

click me!