சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சிறுவனின் உயிரிழப்பக்கு தனியார் மருந்தகத்தில் செலுத்தப்பட்ட ஊசி தான் காரணம் என ஆய்வு அறிக்கையில் தெரியவந்ததை அடுத்து காவல் துறையினர் மருந்தகத்தை மூடி நடவடிக்கை.
சேலம் மாவட்டம், ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ். இவரது மகன் கீர்த்திவாசன். அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த மார்ச் 21ம் தேதி சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாதால் சிறுவனின் பெற்றோர் அதே பகுதியில் உள்ள நடுவலூரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் செந்தில்குமார் (40) என்பவருக்கு சொந்தமான தனியார் மருந்தகத்தில் ஊசி போட்டுள்ளனர்.
ஆடா? முடிந்தால் என் மீது கை வையுங்கள்; திமுகவினருக்கு அண்ணாமலை பகிரங்க சவால்
undefined
திடீரென சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படவே பெற்றோர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் 25ம்தேதி சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.
Ramadoss: ஜூலை 1 முதல் தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அமல்? அரசுக்கு இராமதாஸ் கோரிக்கை
இதுகுறித்து ஆத்தூர் நகர காவல்நிலையத்தில் சிறுவனின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்த நிலையில் சிறுவனின் உடற்கூறாய்வில் தவறான ஊசியால் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்நிலையில் தனியார் மருந்தக உரிமையாளர் செந்தில்குமாரை ஆத்தூர் நகர காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.