சேலம் குரும்பம்பட்டி உயிரியல் பூங்காவில் உணவு வைக்க சென்ற வனவிலங்கு பாதுகாவரை மான் முட்டியதால் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்.
சேலம் மாவட்டம் செட்டி சாவடி அருகே குரும்பட்டி உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு முதலை, கடமான், குரங்கு உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள் மற்றும் பறவைகள் பாராமரிக்கப் பட்டு வருகின்றன. இந்த உயிரியல் பூங்காவிற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தலைக்கேறிய மதுபோதை; பெற்றோரிடம் தகராறு செய்த தம்பியை அடித்து கொன்ற அண்ணன் - ராமநாதபுரத்தில் பரபரப்பு
undefined
தினந்தோறும் வன விலங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று சுமார் 11.30 மணியளவில் வனவிலங்கு பாதுகாவலர் தமிழ்ச்செல்வன் கட மானுக்கு உணவு வைக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கடமான் தமிழ்செல்வனை முட்டியது. இதில் தமிழ்ச்செல்வன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநரும் வனவிலங்கு பாதுகாவலருமான முருகேசன், தமிழ்ச்செல்வனை காப்பாற்ற முயன்ற போது முருகேசனையும் மான் முட்டியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதனை அடுத்து உயிரில் பூங்காவில் இருந்த ஊழியர்கள் இருவரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மருத்துமனையில் தமிழ்ச்செல்வனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். முருகேசன் நெஞ்சு பகுதியில் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடமானுக்கு உணவு வைக்க சென்ற போது மான் முட்டியதில் வனவிலங்கு பாதுகாவலர் உயிரிழந்த சம்பவம் வன ஊழியர்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.