பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வாலிபருக்கு சாதியைக் காரணம் காட்டி முடி வெட்ட மறுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதேபோன்ற சம்பவம் இதற்கு முன்பும் நடந்துள்ளது.
அரூர் அருகே தலித் இளைஞருக்கு முடி வெட்ட மறுத்த சலூன் கடையின் உரிமையாளர் மற்றும் அவரது மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கீரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ்வரன் மற்றும் அவரது தந்தை கருப்பன் (எ) சின்னையன் இருவரும் சலூன் கடை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இவர்களின் கடைக்கு கெளாப்பாறை அம்பேத்கர் நகரை சேர்ந்த தலித் இளைஞர் சஞ்சய் (17) முடி திருத்தம் செய்யச் வந்துள்ளார்.
அப்போது யோகேஸ்வரனிடம் எந்த ஊர் என்று விசாரித்த யோகேஷ், கெளாப்பாறையில் இருந்து வருவது தெரிந்ததும் உனக்கு முடி வெட்ட முடியாது என்றும் வேறு எங்கேயாவது போய் வெட்டிக்கொள் என்றும் கூறியிருக்கிறார். இதனால் அங்கிருந்து திரும்பி வந்த சஞ்சய் நடந்ததை தன் நண்பர்களிடம் கூறினார்.
கோவை - டெல்லி நான்-ஸ்டாப் விமான சேவை அறிமுகம்! வெளிநாட்டுப் பயணங்களை எளிமையாக்கும் ஏர் இந்தியா!
உடனே நண்பர்கள் சேர்ந்து யோகேஷ்வரனின் சலூன் கடைக்குச் சென்று நியாயம் கேட்டனர். அப்போதும் யோகேஷ்வரன் அடாவடியாக முடி வெட்ட முடியாது என்று திட்டவட்டமாகப் பேசியிருக்கிறார். அப்போது கடைக்கு வந்த யோகேஸ்வரனின் தந்தை கருப்பன் காலம் காலமாக இப்படித்தான் நடந்து வருகிறது என்றும் இப்போதும் அப்படித்தான் என்றும் திமிராகக் கூறியுள்ளார்.
இதனால், பாதிக்கப்பட்ட இளைஞரும் அவரது நண்பர்களும் அரூர் காவல் நிலையத்திற்குச் சென்று யோகேஷ்வரன் மற்றும் கருப்பன் மீது புகார் அளித்தனர். புகாரைப் பெற்ற போலீசார் விசாரணைக்குப் பின் இருவரையும் கைது செய்தனர்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வாலிபருக்கு சாதியைக் காரணம் காட்டி முடி வெட்ட மறுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதேபோன்ற சம்பவம் இதற்கு முன்பும் நடந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஊனத்தூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருக்கும் சலூன் கடையில் முடிவெட்டச் சென்ற பூவரசன் என்ற தலித் இளைஞர் ஒருவருக்கு இதே கொடுமை நடந்துள்ளது.
29வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய கமி ரீட்டா! சொந்த சாதனையையே முறியடித்து அசத்தல்!