சேலத்தில் மாதாந்திர தவணைத் தொகை செலுத்தக் கோரி வாடிக்கையாளரின் மனைவியை சிறை பிடித்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த துக்கியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். கூலி வேலை செய்து வருகிறார். இவர் குடும்ப பொருளாதார நெருக்கடி காரணமாக அப்பகுதியில் செயல்பட்டு வந்த பிரபல தனியார் வங்கி ஒன்றில் ரூ.35 ஆயிரம் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதற்காக 52 வாரங்களுக்கு வாரம் ரூ.770 தவணைகத் தொகையாக பிரசாந்த் செலுத்தி வந்துள்ளார்.
தாய்க்கு கரண்ட் ஷாக் கொடுத்தும், கம்பியால் அடித்தும் கொடூர கொலை; சொத்து தகராறில் மகன் வெறிச்செயல்
undefined
இந்நிலையில், இந்த வாரத்திற்கான தவணைத் தொகையை செலுத்த அவருக்கு கால தாமதமானதாகக் கூறப்படுகிறது. தவணைத் தொகையை வசூலிக்க அவரது வீட்டிற்கு சுபா எனும் வங்கி ஊழியர் சென்றுள்ளார். அப்போது வீட்டில் பிரசாந்த் இல்லாததால் அவரது மனைவியை வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் மனைவியின் மூலமாக பிரசாந்தை தொடர்பு கொண்ட வங்கி ஊழியர்கள் உங்கள் மனைவி எங்கள் வங்கி கிளையில் தான் உள்ளார். நீங்கள் இந்த வாரத்திற்கான தவணைத் தொகையை செலுத்திவிட்டு அவரை இங்கிருந்து அழைத்துச் செல்லலாம் என தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அலறியடித்து வங்கிக்கு ஓடி வந்த பிரசாந்திடம், தவணைத் தொயையை செலுத்தாமல் உங்கள் மனைவியை அனுப்ப முடியாது என திட்டவட்டமாக கூறியதாக சொல்லப்படுகிறது.
மே தினத்தை முன்னிட்டு 1 ரூபாய்க்கு டீ; உழைப்பாளர்களை கௌரவிக்கும் தனியார் தேனீர் கடை உரிமையாளர்
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்து காவல் நிலையத்தில் முறையிட்ட பிரசாந்த் பின்னர் காவலர் ஒருவர் முன்னிலையில் வங்கிக்கு இந்த வாரத்திற்கான தவணைத் தொகையான ரூ.770ஐ செலுத்திவிட்டு தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தனியார் வங்கியின் இத்தகைய அடாவடி செயலுக்கு வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.