சேலம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக மதுபானக்கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த இருவரை அங்கு வந்த ஒரு கும்பல் கடுமையாக தாக்கியதைத் தொடர்ந்து பார் சேதமடைந்தது.
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை அடுத்த தொளசம்பட்டி அருகே 5-வது மைல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து தொளசம்பட்டி செல்லும் சாலையில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மத்தியில் டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் நேற்று மாலை பல்வேறு பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள் மது குடிக்க வந்தனர். அப்போது ஓமலூர் அருகேயுள்ள காமாண்டபட்டியை சேர்ந்த ஒரு கும்பல் மது குடிக்க வந்தது.
அப்போது அங்கு ஏற்கனவே மது குடித்து கொண்டிருந்த இரண்டு பேரிடம் பேச்சு கொடுத்த கும்பல், இருவரையும் சரமாரியாக அடித்து தாக்கியது. அதில், ஒருவரை கீழே தள்ளி காலால் உதைத்து கடுமையாக தாக்கினர். மேலும், ஒருவர் கற்களை எடுத்து வாலிபரின் தலையில் தாக்கினார். இதை தொடர்ந்து சிலர் பாரில் இருந்த கற்களை அடித்து, உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து நடத்திய விசாரணையில் இவர்களுக்குள் ஏற்கனவே இருந்த முன் விரோதத்தை மனதில் வைத்து கொண்டும், மண் அள்ளி வியாபாரம் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவும், பாருக்க குடிக்க வந்து அங்கு ஒருவரை ஒருவர் தாக்குதல் நடத்தி, கடையை உடைத்தது தெரிய வந்தது.
ஆன்லைன் செயலில் பணத்தை இழந்த தம்பதி குடும்பத்தோடு தற்கொலை முயற்சி; திருப்பூரில் 6 வயது சிறுமி பலி
மேலும், இந்த கும்பல் இதேபோன்று பார்களுக்கு சென்று அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுவதை வடிக்கையாக கொண்டுள்ளதாகவும், அரசியல் தலையீடுகள் காரணமாக இந்த ரவுடி கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை, வழக்குப்பதிவு செய்வதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர்களை அழைத்து விசாரணை கூட நடத்துவது இல்லை என்று புகார் கூறப்படுகிறது. அதனால், இவர்களின் ரௌடித்தனம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தொண்டையில் சிக்கிய புரோட்டா; மூச்சு திணறி உயிரிழந்த கட்டிட தொழிலாளி - குமரியில் பரபரப்பு
இதுகுறித்து பார் நிர்வாகத்தின் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையோ, விசாரணையோ நடத்த வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் பாரில் நடைபெற்ற தாக்குதல், சண்டை காட்சிகளின் சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.