சேலம் அருகே ஆம்னி கார் மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் அருகே ஆம்னி கார் மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 11 பேர், ஆம்னி காரில் ஒட்டம் பாறை பகுதிக்கு ஆத்தூர் புறவழிச் சாலை வழியாக சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஆம்னி பேருந்து கார் மீது மோதி பயங்கரமாக மோதியது. இதில், காரின் முன்பகுததி அப்பளம் போல் நொறுங்கியது.
இதையும் படிங்க;- ஸ்ரீமதி உயிரிழப்புக்கு இது தான் காரணம்.. உயிரிழந்த மாணவியின் தோழிகள் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்.!
இந்த விபத்தில் ஒரே குடும்பதத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சந்தியா (20), சரண்யா (26), ராஜேஷ் (29), ரம்யா (25) சுகன்யா(28), சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 6 பேர் உடலை கைப்பற்றி பிரேதத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுததியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- கூலிப்படை ஏவி காதல் கணவர் கொலை.. நாடகமாடிய மனைவியின் குட்டு அம்பலம்.. வெளியான பரபரப்பு தகவல்..!