சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அடுத்த சவுரியூர் பகுதியைச் சார்ந்தவர் பூபதி (31). இவரின் மனைவி சங்கீதா (28.) இவர்களுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தையும், 7 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், எடப்பாடியில் உள்ள அரவிந்த் மருத்துவமனையில் சங்கீதாவிற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறான சிகிச்சையால் தான் பெண் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை உறவினர்கள் அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அடுத்த சவுரியூர் பகுதியைச் சார்ந்தவர் பூபதி (31). இவரின் மனைவி சங்கீதா (28.) இவர்களுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தையும், 7 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், எடப்பாடியில் உள்ள அரவிந்த் மருத்துவமனையில் சங்கீதாவிற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
ஆனால், அறுவை சிகிச்சைக்கு பிறகு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் திரும்பவும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர் பரிசோதனை செய்ததில் வயிற்றில் ரத்த கட்டி இருப்பதாக கூறி 2வது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சங்கீதாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3வது முறையாக அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, உறவினர்கள் தவறான சிகிச்சையால் தான் சங்கீதா உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சங்கீதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.