டெஸ்ட் ரெய்டு.. புல்லட் உடன் எஸ்கேப் ஆன காதல் ஜோடி.. சிக்கியது எப்படி தெரியுமா?

By vinoth kumar  |  First Published Apr 6, 2022, 9:48 AM IST

சேலம் மாவட்டம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் ராம்பாலாஜி என்பவருக்கு சொந்தமான, பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்யும் கன்சல்டிங் உள்ளது.  இந்த கன்சல்டிங் கடைக்கு கடந்த ஜனவரி 21-ம் தேதி  இரண்டு  இளம் ஜோடியினர் வந்துள்ளனர் . புல்லட் ஒன்று வாங்க வந்திருப்பதாக கூறி, அங்கிருந்த விலை உயர்ந்த பைக்குகளை அவர்கள் சிறிது நேரம் பார்வையிட்டுள்ளனர்.

சேலத்தில் இருசக்கர வாகனத்தை ஒட்டி பார்த்துவிட்டு வருவதாக கூறி புல்லட் உடன் எஸ்கேப்பான காதல் ஜோடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

புல்லட் உடன் எஸ்கேப்

Latest Videos

சேலம் மாவட்டம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் ராம்பாலாஜி என்பவருக்கு சொந்தமான, பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்யும் கன்சல்டிங் உள்ளது.  இந்த கன்சல்டிங் கடைக்கு கடந்த ஜனவரி 21-ம் தேதி  இரண்டு  இளம் ஜோடியினர் வந்துள்ளனர் . புல்லட் ஒன்று வாங்க வந்திருப்பதாக கூறி, அங்கிருந்த விலை உயர்ந்த பைக்குகளை அவர்கள் சிறிது நேரம் பார்வையிட்டுள்ளனர்.

இதில் 1.65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு  பைக்கை தேர்வு செய்துள்ளனர். பின்னர் வண்டியை ஓட்டிப்பார்த்து விட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.  கடை ஊழியர்களும், இன்னொரு ஜோடி இருக்கிறதே என்ற எண்ணத்தில் நம்பி வண்டியை எடுத்துப்போக அனுமதித்துள்ளனர். ஆனால், நீண்ட நேரமாகியும் அந்த காதல் ஜோடி வரவில்லை. இன்னொரு ஜோடியிடம் அவர்களை தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் யார் என்றே எங்களுக்கு தெரியாது ' என்றும் , ' நாங்கள் தனியாக வந்துள்ளோம் ' என்றும் கூறியுள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார்

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும்,  இன்னொரு ஜோடியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்தபோது வண்டியில் சென்ற பெண்ணை மட்டும் தங்களுக்கு தெரியும் என பிடிபட்ட ஜோடி கூறியுள்ளனர். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 

காதல் ஜோடி கைது

இந்நிலையில், கர்நாடக மாநிலம் கோலாரில் தலைமறைவாக இருந்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பிரவீன் ப்ரீத்தி என்பது தெரியவந்தது. இவர்கள் சேலத்தில் உள்ள பிரபல உணவகத்தில் பிரவீன் மேற்பார்வையாளராகவும், ப்ரீத்தி கேஷியராகவும் பணியாற்றி வந்தது தெரிய வந்தது. பின்னர் காதலர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

click me!