சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியில் சரவணன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் மாஸ்டராக பணி புரியும் மருது என்பவர் தனது பணியை செய்து கொண்டிருந்தார். அருகில் இறைச்சி கடை நடத்தி வரும் ஆறுமுகம் என்பவரும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக 16 வயது சிறுவன் டிப்பர் பொருத்தப்பட்ட மினி டிராக்டர் ஓட்டி வந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் ஓட்டலுக்குள் புகுந்தது.
சேலத்தில் 16 வயது சிறுவன் ஓட்டிய டிராக்டர் ஓட்டலுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இறைச்சிக்கடை வியாபாரி ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரோட்டா மாஸ்டர் மருது படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓட்டலுக்குள் புகுந்த டிராக்டர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியில் சரவணன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் மாஸ்டராக பணி புரியும் மருது என்பவர் தனது பணியை செய்து கொண்டிருந்தார். அருகில் இறைச்சி கடை நடத்தி வரும் ஆறுமுகம் என்பவரும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக 16 வயது சிறுவன் டிப்பர் பொருத்தப்பட்ட மினி டிராக்டர் ஓட்டி வந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் ஓட்டலுக்குள் புகுந்தது.
ஒருவர் பலி
இதில், வெளியே நின்றிருந்த இறைச்சிக் கடைக்காரர் ஆறுமுகம் (70) மற்றும் ஓட்டல் கடை மாஸ்டர் மருது(35) ஆகியோர் மீது மோதியதில் படுகாயமடைந்தனர். இதில், இறைச்சிக் கடைக்காரர் ஆறுமுகம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பரோட்டா மாஸ்டர் மருது என்பவரின் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸ் விசாரணை
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆத்தூர் பகுதியில் மணல் ஏற்றி வரும் டிராக்டர், தண்ணீர் வண்டி இவைகளை தொடர்ந்து சிறுவர்கள் ஓட்டி வாடிக்கையாக இருந்து வருவதும், இதனால் விபத்து ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.