ஒரு ரூபாய் நாணயங்களாகவே கொடுத்து ரூ.2.60 லட்சம் பைக் வாங்கிய யூடியூபர்.. யார் தெரியுமா?

Published : Mar 28, 2022, 09:51 AM IST
ஒரு ரூபாய் நாணயங்களாகவே கொடுத்து ரூ.2.60 லட்சம் பைக் வாங்கிய யூடியூபர்.. யார் தெரியுமா?

சுருக்கம்

சேலம், அம்மாபேட்டை காந்தி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இளம் வயது முதலே மிக உயர்ந்த விலையில் இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தார். அதற்காக சிறுகச்சிறுக உண்டியலில் ரூபாய் நாணயங்களை சேமிக்கத் தொடங்கினார். அதிலும், சேமிப்பின் முக்கியத்துவத்தை மக்கள் அறிய வேண்டும் நோக்கில்  ரூ.2.60 லட்சத்தையும் ரூ.1 நாணயங்களாக சேகரித்தார்.

சேலத்தை சேர்ந்த யூடியூபர் பூபதி தான் சேமித்து வைத்த ஒரு ரூபாய் நாணயங்களை மூட்டை மூட்டையாக எடுத்து சென்று ரூ.2.60 லட்சம் மதிப்புள்ள  பைக் வாங்கிய சம்பவம் மனைவரும் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம், அம்மாபேட்டை காந்தி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இளம் வயது முதலே மிக உயர்ந்த விலையில் இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தார். அதற்காக சிறுகச்சிறுக உண்டியலில் ரூபாய் நாணயங்களை சேமிக்கத் தொடங்கினார். அதிலும், சேமிப்பின் முக்கியத்துவத்தை மக்கள் அறிய வேண்டும் நோக்கில்  ரூ.2.60 லட்சத்தையும் ரூ.1 நாணயங்களாக சேகரித்தார்.

இதனையடுத்து பூபதி தான் சேகரித்து வைத்த ஒரு ரூபாய் நாணயங்களை மூட்டை மூட்டையாக கட்டி அம்மாபேட்டை பகுதியில் உள்ள இருசக்கர வாகன விற்பனை மையத்துக்கு கொண்டு வந்தார். அங்கு நாணயங்களை குவியலாக தரையில் கொட்டி நண்பர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களைக் கொண்டு 10 மணி நேரம் ஒரு ரூபாய் நாணயத்தை எண்ணி ரூ.2.60 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை வாங்கிச் சென்றார்.

இதனை பெற்றுக்கொண்ட பூபதி, தனது இளம் வயது ஆசையை நீண்ட ஆண்டுகளுக்கு நிறைவேறியதற்கு உதவியாக இருந்த நண்பர்களுக்கு நன்றி கூறிக்கொண்டார். சிறுகச்சிறுக சேமித்தால் பெருக வாழலாம் என்ற பழமொழிக்கு ஏற்ப மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை மக்கள் அறிய வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

சேலத்தில் பரபரப்பு! திமுக பிரமுகர் சுட்டுக்கொ*லையால் அதிர்ச்சி!
35 வயதில் பலான வேலையை செய்து விட்டு 60 வயதில் சிக்கிய நல்லதம்பி! 25 வருஷத்துக்கு பின் பிடிப்பட்டது எப்படி?