ரண்யாவிற்கும் ரவிக்குமாருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ரவிக்குமார் வேலைக்கு சென்ற நேரத்தில் சரண்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சரண்யாவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சேலத்தில் காதல் மனைவி தற்கொலை செய்ததால், காதலனும் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடிக்கடி தகராறு
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை அடுத்த தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார்(24) தனியார் நிறுவனத்தில் டூவீலர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சரண்யா(21) என்ற இளம்பெண்ணும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், சரண்யாவிற்கும் ரவிக்குமாருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ரவிக்குமார் வேலைக்கு சென்ற நேரத்தில் சரண்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சரண்யாவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
காதலி தூக்கிட்டு தற்கொலை
இந்த தகவல் கணவருக்கு தெரியவந்ததையடுத்து அலறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடிவந்தார். மனைவியில் உடலை பார்த்து கதறி அழுதார். சரண்யா தற்கொலைக்கு கணவர் தான் காரணம் என்று நினைத்த உறவினர்கள் ரவிக்குமாரை கடுமையாக தாக்கினர். அங்கிருந்த ரவிக்குமார் திடீரென மாயமாகினார். காதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் இருந்த ரவிக்குமார் ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து ரவிக்குமார் தற்கொலை செய்துகொண்டார்.
ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை
இதில், தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் பார்த்த போது தண்டவாளத்திற்குள் உடலும், வெளிப்பகுதியில் தலையும் துண்டாக கிடந்தது. இதனையடுத்து, உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் திருமணம் செய்து 3 மாதங்களே ஆன நிலையில் இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.