கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் வன்முறையாக வெடித்துள்ள நிலையில் தற்போது சேலத்தில் அரசு பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் வன்முறையாக வெடித்துள்ள நிலையில் தற்போது சேலத்தில் அரசு பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்துள்ளார். ஆனால், யாரிடமும் பேசாமல் மவுனமாக இருந்துள்ளார். பின்னர் அவர் இரண்டாம் மாடியில் உள்ள வகுப்பறைக்கு சென்ற மாணவி சிறிது நேரத்தில் இரண்டாம் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து, அங்கு பணியில் இருந்த ஆசிரியர்கள் படுகாயமடைந்த மாணவியை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். உடனே தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு விரைந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த பள்ளி மாணவிக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த மாணவி இன்று காலை பள்ளிக்கு சென்று பள்ளியின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஆனாலும், இதுதொடர்பாக உறுதிபட தகவல் இன்னும் வெளியாகவில்லை.