வாழப்பாடி அருகே குடும்பத்தகராறில் நள்ளிரவில் புதுமணபெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்த கணவனும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்முருகன் (வயது 27). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் சந்திரபிள்ளைவலசு பகுதியில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்த அபிராமி (19) என்ற பெண்ணை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் கணவன், மனைவி இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த அபிராமி அருகில் இருந்த 100 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் குதித்துள்ளார். இதனைக் கண்ட கணவன் அருள்முருகனும் செய்வதறியாது திகைத்து மனைவியை காப்பாற்ற எண்ணி அவரும் கிணற்றில் குதித்துள்ளார். சுமார் 10 அடி ஆழம் மட்டுமே கிணற்றில் நீர் இருந்ததால் கிணற்றில் குதித்த அபிராமி தலையில் பலத்த காயமடைந்து கிணற்றிலே உயிரிழந்தார். மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்த அருள்முருகனும் உயிரிழந்தார்.
undefined
திருத்தணி முருகன் கோவிலில் நள்ளிரவில் சாமி தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு
இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து அருள்முருகன் மற்றும் அபிராமி இருவரின் உடல்களையும் சடலமாக மீட்டனர். கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வாழப்பாடி காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
திருமணமான மூன்று மாதத்தில் கணவன் மனைவி சண்டையில் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மனைவி மற்றும் அவரைக் காப்பாற்ற சென்ற கணவனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.