60 ஆண்டு பழமையான கோவிலை இடிக்க விடாமல் சாமி ஆடிய பெண்கள்; தரைமட்டமாக்கிய போலீஸ்

By Velmurugan sFirst Published Dec 27, 2023, 6:14 PM IST
Highlights

சேலத்தில் 60 ஆண்டுகள் பழமையான கோவிலை நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்க வந்த அதிகாரிகளுடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அம்மாபேட்டை வித்யாநகர் குஞ்சான்காடு பகுதியில் சாலையோரத்தில் அமைந்துள்ள சக்தி காளியம்மன் கோவில்  வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், இந்த கோவிலை அகற்ற வேண்டும் என்று கூறி அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுப்படி கோவிலை அகற்ற சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவிலை அகற்றும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தேனியில் 75 வயது மூதாட்டி கதற கதற கற்பழிப்பு; காமவெறியனை மடக்கி பிடித்த பொதுமக்கள் - மூதாட்டி கவைலக்கிடம்

இதனையடுத்து இன்று மீண்டும் நீதிமன்ற உத்தரவுபடி கோவிலை அகற்றுவதற்காக  ஜேசிபி வாகனத்தோடு அலுவலர்கள் வந்தனர். இதற்காக 50க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கோவில் முன்பு அமர்ந்தும், வாகனத்தை சிறைப்பிடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில பெண்கள் கோவிலை இடிக்க விடமாட்டேன் என சாலையில் உருண்டு சாமி வந்து ஆடியதால் பரபரப்பு நிலவியது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனிடையே வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு மேலாக அவகாசம் கொடுத்தும் பொதுமக்கள் சட்ட ரீதியான எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக வருவாய் துறை அலுவலர்கள் தரப்பில் பொது மக்களிடம் கூறப்பட்டது. இருப்பினும் ஏற்கனவே வந்த மாநகராட்சி அதிகாரிகள் கோவிலால் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று உறுதி அளித்துச் சென்றதால் நாங்கள் நீதிமன்றத்தை நாடவில்லை என்றும் தற்போது அவகாசம் கொடுத்தால் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் பதிலளித்தனர். 

குடித்துவிட்டு தினமும் தகராறு; காதல் கணவனை கழுத்தை நெறித்து கொலை செய்த பெண் - திருச்சியில் பரபரப்பு

இதற்கு உடன்படாத அதிகாரிகள்  நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது மாநகராட்சி நிர்வாகத்தின் கடமை என்று கூறி, எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து கோவிலின் உள்ளே இருந்த சாமி சிலை மற்றும் பூஜை பொருட்களை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் வெளியேற்றி ஜேசிபி இயந்திரத்தின் மூலம் கோவில் முழுவதும் இடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

click me!