திமுக ஊராட்சி மன்றத் தலைவி பதவி நீக்கம்.. மாவட்ட ஆட்சியர் அதிரடி.. என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumarFirst Published Dec 21, 2023, 7:17 AM IST
Highlights

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருபவர் கலைச்செல்வி சிவக்குமார். இவர் திமுகவை சேர்ந்தவர். 

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் பைத்தூர் திமுக ஊராட்சி மன்ற தலைவி பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருபவர் கலைச்செல்வி சிவக்குமார். இவர் திமுகவை சேர்ந்தவர்.  இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 அதேபோல் ஆட்டுக்கொட்டகை அமைப்பதில் முறைகேடு செய்திருப்பதாகவும் பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவி மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் முறைகேடு செய்திருப்பது உறுதியானது.

இதையும் படிங்க;- 50க்கும் மேற்பட்ட சடலங்கள்? தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிணவறையில் அணிவகுத்துள்ள ஆம்புலன்ஸ்.. அதிமுக பகீர்!

இதனையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வியை பதவி நீக்கம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!