சேலம் மாடர்ன் திரையரங்க இடத்தை அபகரித்து கருணாநிதிக்கு சிலை வைக்க முனையும் அரசு? நில உரிமையாளர் பரபரப்பு தகவல்

By Velmurugan s  |  First Published Dec 15, 2023, 5:33 PM IST

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகத்தால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கருணாநிதி சிலை வைக்கும் விவகாரத்தில் தொழிலதிபர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


தமிழக திரை உலகின் தந்தை என்று போற்றப்படும் டி ஆர் சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அவரது வாரிசுதாரர்களால் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் கலைஞர் கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட பிரபலங்கள் தமிழகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டது அனைவரும் அறிந்ததே. மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவாக அதன் நுழைவாயில் இன்றளவும் தனியாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

நினைவுச் சின்னம் அமைந்துள்ள 1350 சதுர அடி நிலத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் விலைக்கு கேட்டதாகவும், அது குறித்து ஆலோசனை செய்து பதில் அளிப்பதாக நிலத்தின் உரிமையாளர் விஜய வர்மா கூறியுள்ளார். இதனிடையே தமிழக முதல்வரின் நன்மதிப்பை பெற சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் நுழைவு வாயில் சின்னம் அமைந்த பகுதியை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என்று கூறி அதிகாரிகளை பயன்படுத்தி அச்சுறுத்தல் விடுவதாக நில உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளிடம் மீண்டும் போதை காளான், கஞ்சா விற்பனை; கேரளாவை சேர்ந்த 7 பேர் கொடைக்கானலில் கைது

அந்த இடத்தில் டி.ஆர் சுந்தரம் சினிமா எடுக்க பயன்படுத்திய உபகரணங்களை காட்சி பொருளாக வைக்க திட்டமிட்டு இருந்த நிலையில், கருணாநிதியின் சிலை வைப்பதற்காக நிலத்தை அபகரிக்க முயற்சி நடைபெறுவதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிலை வைக்க நிலம் கொடுக்காத காரணத்தினால் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பொறுப்பை மறந்து நான்காம் தர மனிதர்களை போன்று அராஜகப் போக்கில் ஈடுபடுவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகத்தால் தங்களது குடும்பத்திற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!