சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து; நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

By Velmurugan s  |  First Published Nov 22, 2023, 10:22 AM IST

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.


மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி சேலத்தில் 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 13 ஏக்கர் பரப்பளவில் இந்த மருத்துவமனை அமைந்துள்ள நிலையில் இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

இப்படியான நிலையில் சேலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் தளத்தில் ஏசியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததா.? துர்நாற்றம் வீசியது ஏன்.? குடிநீர் தொட்டியை இடிக்க காரணம் என்ன.?

click me!