மக்களுடன் முதல்வர் திட்டத்தை சேலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டத்தில் இன்று முதல் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு மூலம் 142 இடங்களில் நடக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 13 அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே குடையின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெற அனைத்து மாநகர நகர பேரூராட்சி மற்றும் நகரங்களை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் இன்று முதல் வரும் ஜனவரி 6-ம் தேதி வரை 16 வேலை நாட்களில் 142 முகாம்களை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களுடன் முதல்வர் முகாமினை தொடங்கி வைத்தார். பல்வேறு துறைகள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள 13 ஸ்டால்களை பார்வையிட்ட அவர் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது அதற்கான தீர்வு எப்போது தர முடியும் என்பது உள்ளிட்ட விவரங்களை அதிகாரியிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
புயலா? நாங்க பாடுனா சுனாமியே வழிவிடும்; மழை வெள்ளத்தின் நடுவே தேவாரம் பாடி வளைகாப்பு நடத்திய தம்பதி
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு வழங்கிய 32 பயனாளிகளுக்கு உடனடி தீர்வு கண்டு அதற்கான ஆணைகள் மற்றும் நலத்திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளரிடம் கூறும்போது, இன்று தொடங்கியுள்ள இந்த முகாம் அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடக்க உள்ளது இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். முகாம்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். சேலம் மாவட்டத்தில் 142 இடங்களில் இந்த திட்ட முகாம் நடக்கிறது என்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D