திடீர் நெஞ்சுவலி.. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மருத்துவமனையில் அனுமதி!

By vinoth kumar  |  First Published Dec 28, 2023, 7:43 AM IST

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 


சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன். இவர், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, விதிகளை மீறி சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக இருந்த இளங்கோவன் என்பவர் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 

இதுதொடர்பான விசாரணையில் அரசு நிதியை அவர் தவறாக பயன்படுத்தி  முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 7 நாட்கள் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து  பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் தொடர்புடைய துணைவேந்தர் அறை, அவரது வீடு, பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க;- கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலை., துணை வேந்தர் தொடர்புடைய இடங்களில் சோதனை!

இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஜெகநாதன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிர கண்காணித்து வருகின்றனர். 

click me!