சேலத்தில் இரவில் காதலியுடன் தனிமையில் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென காதலியின் அம்மா வந்ததால் பயத்தில் மாடியில் இருந்து குதித்த சட்டக்கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அருகே தனியார் சட்டக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சட்டக்கல்லூரியில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் பயிலும் பிற மாவட்ட மாணவர்கள் கல்லூயின் சுற்றுப்பகுதியில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கியிருந்து பயின்று வருகின்றனர்.
அந்த வகையில், தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி அருகே உள்ள காமராஜ் நகரைச் சேர்ந்த சஞ்சய் என்ற மாணவர் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே போன்று கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவரும் அதே கல்லூரியில் சேர்ந்து படித்து வந்துள்ளார். மாணவி கல்லூரிக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார்.
மாணவியும், மாணவனும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் மொட்டை மாடிக்கு வருமறு மாணவன், மாணவிக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளான். அதன்படி அந்த மாணவியும் மாடிக்கு வர இருவரும் தனிமையில் பேசிக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் அம்மா திடீரென மாடிக்கு செல்லவே அவரை பார்த்த மாணவன் சஞ்சய் செய்வதறியாது மாடியில் இருந்து குதித்துள்ளான்.
தனது பேரக் குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற பாட்டி; சேலத்தில் பரபரப்பு
இதில் பலத்த காயமடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செந்தில் பாலாஜி எனக்கு இன்னொரு மகன்: அவர் வந்தவிட்டாலே வெற்றி உறுதி; ஈவிகேஎஸ் உருக்கம்