சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கிணற்றில் குதித்த மகளும், அவரை காப்பாற்ற குதித்த தந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த பைத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் கணேசன் (வயது 45). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவருக்கு பிரவீணா, மேகலா என்ற இரு மகள்கள் உள்ளனர். மனைவி சத்யா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தனது இரு மகள்களையும் பார்த்துக் கொள்ள பெண் வேண்டும் என்ற காரணத்திற்காக கணேசன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளையம்மாள் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். மூத்த மகள் பிரவீனாவுக்கு திருமணம் நடைபெற்று தன் கணவர் வீட்டில் உள்ள நிலையில், இரண்டாவது மகளான மேகலா சேலம் பனமரத்துப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
32 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்த நிலையில், தம்பிக்கும், அக்கா மேகலாவுக்கும் டிவி பார்ப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டிற்கு வந்த கணேசன் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மேகலா வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். இதனை பார்த்த கணேசன் மகளை காப்பாற்றும் எண்ணத்தில் தாமும் கிணற்றில் குதித்துள்ளார்.
அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு; கர்ப்பிணிகளை அட்சதை தூவி வாழ்த்திய அமைச்சர்
இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இருவரையும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். தந்தை, மகள் கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.