சேலத்தில் ஆம்புலன்ஸ் மோதி தூக்கி வீசப்பட்ட தாத்தா, பேரன்; சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சி

By Velmurugan s  |  First Published May 24, 2023, 9:53 AM IST

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஆம்புலன்ஸ் வாகனம் மோதிய விபத்தில் தாத்தா, பேரன் தூக்கி வீசப்பட்டு இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தொளசம்பட்டி பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் முருகன் (வயது 60). இவர் அப்பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் பொருட்களை வாங்குவதற்காக தனது பேரன் மோனிசுடன் மளிகை கடைக்கு வந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

இதையடுத்து பொருட்களை வாங்கிய பின் சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு இருவரும் புறப்பட தயாராகினர்.

அப்போது அதிவேக வந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் அவர்கள் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். தொடர்ந்து படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுனரை பிடித்து தொளசம்பட்டி போலீசாரிடம் ஒப்படைப்படைத்தனர். தொளசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!