சேலத்தில் சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை அளித்த 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

By Velmurugan s  |  First Published May 17, 2023, 12:26 PM IST

சேலத்தில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்த 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.


சேலம், ஜாகீா் அம்மாபாளையத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு 5 போ் கொண்ட கும்பல், கடந்த ஏப்ரல் 25ம் தேதி பாலியல் தொல்லை கொடுத்தது. இவா்கள் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், சம்பவம் குறித்து வெளியே தெரிவித்தால் அவரது தந்தையையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனா்.

கோவையில் பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் காட்டு யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் பலி

Latest Videos

இதுதொடா்பாக சூரமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து சேலம், ஜாகீா் அம்மாபாளையத்தைச் சோ்ந்த வினித் (23), தேக்கம்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ் (21), ஆகாஷ் (19), சீனிவாசன் ( 23), அருள்குமாா் (23) ஆகியோரை கைது செய்தனா்.

சொத்துக்காக உடன் பிறந்த அண்ணனை கொலை செய்த தம்பி, தங்கை உட்பட 9 பேர் கைது

பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டு பொது ஒழுங்கை பாதிக்கும் வண்ணம் நடந்து கொண்டதால், காவல் துணை ஆணையா் கெளதம் கோயல் பரிந்துரையின் பேரில், மாநகரக் காவல் ஆணையா் விஜயகுமாரி 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

click me!