சேலத்தில் பட்டப்பகலில் போதை ஊசி செலுத்திகொண்ட இளைஞர்கள்! மடக்கிப் பிடித்து கவுன்சிலிங் அனுப்பிய காவல்துறை!

By Dinesh TG  |  First Published May 17, 2023, 12:17 PM IST

சேலத்தில் சொகுசு காரில் போதை ஊசி செலுத்தி கொண்ட 7 இளைஞர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவர்களை, அரசு மருத்துவமனையில் கவுன்சிலிங்காக அழைத்துச் சென்றனர்.
 


சேலம் டவுன் ஆற்றோர மார்க்கெட் பகுதியில் நீண்ட நேரமாக ஒரு சொகுசு கார் நின்றுள்ளது. அந்த காரில் இளைஞர்கள் சிலர் இருந்ததால் சந்தேகமடைந்த அந்த பகுதி மக்கள், சேலம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திறைகு விரைந்து வந்த போலீசார், காரில் இருந்தவர்களை மடக்கிப் பிடித்தனர். 2 பேர் தப்பி ஓட்டி விட்டனர். 7 பேர் மாட்டிக்கொண்டனர்.

பிடிபட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் கிச்சிப்பாளையம், கோரிமேடு, சின்னதிருப்பதி, பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், குளுக்கோசில் வலி நிவாரணி மாத்திரையை கலந்து ஊசி மூலம் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து குளூக்கோஸ் பாட்டில்கள் மற்றும் சிரெஞ்ச் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.



தொடர்ந்து, அவர்களை எச்சரித்த போலீசார் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர 7 பேருக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள மனநல நிபுணர் மூலம் ஒரு வாரம் கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி அவர்கள் மனநல பிரிவில் அனுமதிக்கப்பட்டு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. கவுன்சிலிங்கிற்கு வராமல் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

click me!