
சென்னையில் இருந்து நேற்று இரவு கோயம்புத்தூருக்கு சேலம் வழியாக தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்தில் 27 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஆம்னி பேருந்தை கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நெப்போலியன் என்ற வாலிபர் இயக்கியுள்ளார்.
சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஆம்னி பேருந்து வாழப்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் இடது புறம் முழுவதுமாக சேதம் அடைந்தது. ஆம்னி பேருந்தில் பயணம் செய்து தூங்கிக் கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
ராங் ரூட்டில் வந்து ராங்காக பேசிய இளம்பெண்; அபராதம் விதித்த போலீசார்
விபத்து குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வாழப்பாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் ஒருவருக்கு கால் முறிந்தது. உயிருக்கு ஆபத்தாக உள்ளவர்கள் குறித்தும், மற்ற காயம் அடைந்தவர்கள் விபரங்கள் குறித்து வாழப்பாடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரையரங்க உணவகத்தில் கூலாக பப்ஸ் சாப்பிட்ட பூனை; ஷாக்கான ரசிகர்கள்: லாக் செய்த அதிகாரிகள்