ஊட்டியில் கட்டுமானப் பணியின் போது திடீரென சுவர் இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டி அருகே காந்தி நகர் பகுதியில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டினைச் சுற்றி 30 அடி உயரத்திற்கு கருங்கற்களால் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. மேலும் வீட்டின் இடது புறத்தில் பாதுகாப்பிற்காக சுமார் 50 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
கல்வி தான் அனைத்திற்கும் அடிப்படை; கல்வி வளர்ச்சி பெற்ற நாடு செழிப்பாக இருக்கும் - அமைச்சர் ஏ.வ.வேலு
undefined
இந்நிலையில் இன்று வீட்டின் மேல் புறத்தில் இருந்த பழைய பயன்படுத்தாத கழிப்பிடம் வலுவிழந்து திடீரென சரிந்து விழுந்தது. கட்டிடத்தின் கீழ் புறத்தில் பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சுவர் விழுந்தது.
இந்த விபத்தில் பாக்கியா, ராதா, சக்கிலா, முத்துலட்சுமி, உமாபதி என 6 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரும், மீட்புத் துறையினரும் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.