VK Sasikala: 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கொடநாட்டில் சசிகலா; கண்ணீர் மல்க பேட்டி

By Velmurugan s  |  First Published Jan 18, 2024, 10:37 PM IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேடிற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் முதல் முறையாக சசிகலா 7 வருடங்களுக்கு பிறகு வருகை புரிந்துள்ளார்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பங்குதாரராக உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு மற்றும் கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பின் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் சசிகலா வருகை புரிந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்து, சாலை மார்க்கமாக தற்போது கோடநாடு எஸ்டேட்டிற்கு வருகை புரிந்து உள்ளார். சசிகலாவின் வருகையை ஒட்டி கோடநாடு எஸ்டேட், கிரீன் டீ எஸ்டேட் மற்றும் தேயிலை தொழிற்சாலை ஊழியர்கள் காத்திருந்து வரவேற்பு அளித்தனர். கண்ணீர் மல்க கொடநாடு வந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, கொடநாடு தோட்டத்தில் பணியாற்றும் தொழிலளர்களை பார்க்க வந்துள்ளேன். ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்றார்.

அயோத்தியில் கோவிலை இடித்து தான் மசூதியே கட்டினார்கள்; உதயநிதிக்கு வானதி சீனிவாசன் பதில்

மேலும் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளி ஓம் பகதூர் சிறு வயது முதலே நீண்ட காலமாக எஸ்டேட்டில் பணியாற்றி வந்தார். நிச்சயமாக கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையை பெற்று தருவார் என நம்புவதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும் கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்கு பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக கொடநாடு வந்துள்ளதாக கூறிய அவர், விரைவில் அவரது சிலை பூஜை செய்து திறக்கபடும் என்றார். அதிமுக ஒன்றுபட தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், அந்த நடவடிக்கை விரைவில் வெற்றி அடையும். மேலும் அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு தர வேண்டும் என்றார்.

click me!