ஷாக்கிங் நியூஸ்.. கூடலூரில் சிறுத்தை தாக்கியதில் குழந்தை பலி..!

Published : Jan 07, 2024, 11:33 AM ISTUpdated : Jan 07, 2024, 11:49 AM IST
ஷாக்கிங் நியூஸ்.. கூடலூரில்  சிறுத்தை தாக்கியதில் குழந்தை பலி..!

சுருக்கம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் மேங்கோ ரேன்ஜ் எஸ்டேட்டில் பணிபுரியவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவசங்கர் கர்வா. இவரது மகள் நான்சி மூன்று வயது அப்பகுதியில் உள்ள பால்வாடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது காட்டுப் பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை குழந்தை நான்சியை தூக்கிச் சென்றது.

கூடலூர் அருகே மீண்டும் சிறுத்தை தாக்கியதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் மேங்கோ ரேன்ஜ் எஸ்டேட்டில் பணிபுரியவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவசங்கர் கர்வா. இவரது மகள் நான்சி மூன்று வயது அப்பகுதியில் உள்ள பால்வாடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது காட்டுப் பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை குழந்தை நான்சியை தூக்கிச் சென்றது.

இதையும் படிங்க;- பொங்கல் பரிசுத்தொகுப்பு.. இன்று முதல் டோக்கன் விநியோகம்.. ரொக்கம் எப்போது கிடைக்கும் தெரியுமா?

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு பின் தொடரவே சிறுத்தை குழந்தையை போட்டுவிட்டு சென்றது. இதனை தொடர்ந்து குழந்தையை மீட்டெடுத்த பொதுமக்கள் பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நான்சி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

இதையும் படிங்க;-  நீர்நிலையில் ஆக்கிரமித்து கட்டிய போலீஸ் ஸ்டேஷனை காப்பாற்ற ஆவணங்களை தேடும் திமுக அரசு.. அறப்போர் இயக்கம்!

ஏற்கனவே கீர்த்திகா (4) கடந்த 4ம் தேதி சிறுத்தை தாக்கியதில் இருந்து உயிர் தப்பினார். இதே பகுதியில் கடந்த 21-ம் தேதி தேயிலைத் தோட்டத்தில் தேயிலைப் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பெண்களை சிறுத்தை தாக்கியது. இதில் படுகாயமடைந்த சரிதா என்ற பெண்மணி கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் 7 நாட்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று மீண்டும் ஒரு குழந்தை சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை எழுப்பி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

School Holiday: மாணவர்களின் கவனத்திற்கு..! பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! அரசு அறிவிப்பு!
நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை! அவலாஞ்சியில் 292 மி.மீ பதிவு! 2 நாள் ஆரஞ்சு அலர்ட்!