கனமழையால் மீண்டும் மண் சரிவு; ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் நிறுத்தம்

By Velmurugan s  |  First Published Dec 21, 2023, 12:36 PM IST

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.


நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் பர்லியாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் அடர்லி_ ஹில்குரோவ் ரயில் நிலையங்களிடையே மண் சரிவு ஏற்பட்டு ரயில் பாதையில் சிறிய பாறாங்கற்கள்  உருண்டு விழுந்தன. 

Latest Videos

undefined

ரயில் பாதையோரத்தில் இருந்த மரங்கள்  வேரோடு சாய்ந்து ரயில் பாதையின் குறுக்கே கிடந்தன. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம் போல் காலை 7.10 மணிக்கு 180 சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்ட மலைரெயில் கல்லாறு ரெயில் நிலையத்தில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. 

மயிலாடுதுறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேனில் நீச்சல் அடித்த தவளை; வாடிக்கையாளர் அதிர்ச்சி

அதன் பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு இயக்கி வரப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஆன்லைனில் புக்கிங் செய்த சுற்றுலா பயணிகள் தங்களது பயண கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொண்டனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் ஊட்டி, மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. ரயில்வே துறை உயர் அதிகாரிகளின் உத்தரவு பேரில் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

click me!