நீலகிரியில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலச்சரிவுக்கு தீர்வு; அமைச்சர் ஏ.வ.வேலு தகவல்

By Velmurugan s  |  First Published Dec 16, 2023, 3:34 PM IST

நீலகிரி மாவட்டத்தில் மண்சரிவு ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு புதிய தொழில்நுட்பமான மண் ஆணி பொருத்தப்பட்டு மண் சரிவு கட்டுப்படுத்தப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.


நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதியில் கடந்த 23ம் தேதி இரவு கொட்டிக் தீர்த்த கனமழையால், கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி பகுதிகளில் 37 செ.மீ. மழை ஒரே இரவில் பதிவானது. இதனால் கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் எட்டு இடங்களில் மண்சரிவு மற்றும் குஞ்சப்பனை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை துண்டிக்கப்பட்ட நிலையில், மாநில நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி கொட்டும் மழையில் ஒன்பது மணி நேரம் பணியாற்றி சாலையில் ஏற்ப்பட்ட மண்சரிவை அகற்றி தடையில்லா  போக்குவரத்தை துவக்கினர்.

இந்நிலையில் மண்சரிவு ஏற்ப்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்ட பணிகளை மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கோத்தகிரி, மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட குஞ்சப்பனை பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை பெய்த போது நீலகிரி மாவட்டத்திலும் அதே அளவு மழை பெய்தது.

Tap to resize

Latest Videos

undefined

அரிவாள், கத்தியுடன் ரீல்ஸ்; கடை வீதியில் கெத்து காட்டிய இளைஞரை அலேக்காக தூக்கிச்சென்ற காவல்துறை

குறிப்பாக கோத்தகிரி மலைப்பாதையில் கடந்த 23ம் தேதி வரலாறு காணாத அளவுக்கு 37 செமீ மழை பெய்ததால், எட்டு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. கடந்த காலங்களில் மழையால் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட போது இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் சாலை துண்டிக்கப்பட்ட நிலையில், கடந்த 23 அன்று மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் 9 மணி நேரத்திற்குள் சாலை போக்குவரத்து சரிசெய்யப்பட்டு போக்குவரத்து துவங்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எதிர் காலத்தில் மண்சரிவு ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பமான மண் ஆணி பொருத்துதல் திட்டத்தை பயன்படுத்தி, மண் சரிவு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் மண்வள ஆய்வு மையத்தின் நிபுணர்களோடு இணைந்து மண்சரிவு ஏற்படுவதை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு  தெரிவித்துள்ளார்.

click me!