உதகை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் பற்றாக்குறையால் நோயாளி உயிரிழப்பு? இளைஞர் பரபரப்பு குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Dec 14, 2023, 1:44 PM IST

உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.


உதகை அரசு மருத்துவ கல்லூரிக்கு கடந்த செவ்வாய் கிழமை சிறுநீரகத்தில் கல் இருப்பதாக கூறி எலன் ரூபி (59) என்ற பெண் சிகிச்சைக்காக அனுமதிகாப்பட்டார். அப்போது, அரசு மருத்துவ மனையில் அவருக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் எலன் ரூபிக்கு வயிற்றில் வலி ஏற்பட்டதாகக் கூறி, அவரது மகன் அருகில் இருந்த பயிற்சி மருத்துவர்களிடம் கூறி, சிகிச்சை அளிக்க அழைத்துள்ளார். 

ஆனால் போதிய மருத்துவர்கள் இல்லாததால், அங்கிருந்த மருத்துவர்கள், இந்த சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர்கள் வருவார்கள் என தெரிவித்துள்ளனர். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால் தனது அம்மாவை, தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல டிஸ்சார்ஜ் செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு அங்கு பணியில் இருந்த மருத்துவர்களும், செவிலியர்களும் மெத்தனமாக இருந்ததாகவும், பணியில் இருந்த மருத்துவர் சிரித்து கொண்டே பதில் ஏதும் தெரிவிக்காமல் இருந்ததாகவும் வேதனை தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

22 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்ட உதகை மலை ரயில்; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

இதனிடையே, உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் எலன் ரூபி கழிவறைக்கு சென்று திரும்பிய போது, மயக்கமடைந்து விழுந்து உயரிழந்துள்ளார். குறிப்பாக தற்போது  உதகை அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில், போதிய மருத்துவர்கள் இல்லாததும், எந்த சிகிச்சைக்கும் போதிய மருத்துவ வசதிகள், மருந்துகள் இல்லாமல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து செல்வது வாடிக்கையான நிலையில், அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்களே தனியார் மருத்துவ மனைகளுக்கு பரிந்துரை செய்வதாக நோயாளிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் சிறுநீரகத்தில் கல் இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

click me!