நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு உருவச்சிலை மற்றும் மணி மண்டபம் அமைப்பதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் சசிகலா.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டிற்கு மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக நேற்று மாலை கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டிற்கு சசிகலா வந்தடைந்தார்.
undefined
இந்த நிலையில் தற்போது கோடநாடு எஸ்டேட் பகுதியில் உள்ள கோடநாடு காட்சி முனைக்கு செல்லக்கூடிய பிரதான சாலை அருகே 10 நம்பர் நுழைவு வாயில் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிலை நிறுவுவதற்கும், மணிமண்டபம் அமைப்பதற்கும் ஜெயலலிதா தோழியான சசிகலா அவரது குடும்ப உறுப்பினர்கள், கோடநாடு எஸ்டேட் மேலாளர் முன்னிலையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, நான் இதுவரை அம்மா இல்லாமல் கோடநாடு வந்ததில்லை. அதனால் எனக்கு ஒரு தயக்கம். அதனால் நான் எப்படி அங்கு செல்வது என்று எண்ணி நான் இங்கு வராமலேயே இருந்தேன். குறிப்பாக அம்மாவிற்கு மிகவும் பிடித்த இடம். இங்கு பணியாற்றும் பணியாளர்கள் எங்கள் இருவரிடமும் அன்பாக பழகுவார்கள்.
அம்மாவும் அவர்களை தொழிலாளர்களாக நினைத்ததில்லை. அம்மா இங்கு வரும் போதெல்லாம் தொழிலாளர் வேலை செய்யும் இடத்திற்கே சென்று அவர்களிடம் சகஜமாக பழகி உள்ளார்கள். ஒரு குடும்பத்தில், குடும்ப பெண் எப்படி இருப்பார்களோ அதேபோல் கோடநாடு வந்தால் ஜெயலலிதா அப்படி தான் இருப்பார்கள். அந்த காலம் எல்லாம் எனக்கு 7 வயதுடன் முடிந்தது. ஆனால் அதை திரும்ப ஞாபகம் படுத்தும் இடம் கோடநாடு என்று ஜெயலலிதா அடிக்கடி சொல்வார்கள். ஆனால் அவருக்கு ரொம்ப பிடித்த இடம் என்பதால் சாஸ்திரம் படியும், வாஸ்து படியும் இந்த இடத்தை தேர்வு செய்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோடநாடு எஸ்டேட் பகுதியில் சிலை நிறுவி, மணி மண்டபம் கட்ட பூமி பூஜை செய்யப்பட்டது.
குறிப்பாக கோடநாடு காட்சி முனை சுற்றுலா ஸ்தலமாக இருப்பதால் அனைத்து மக்களும் வந்து பார்த்து செல்லும் அளவிற்கு அமைக்கப்படும். அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் எனவும் இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்க்குள் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.