முட்டையின் விலை திடீர் உயர்வு.. அசைவ பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய விலை .. எவ்வளவு தெரியுமா..?

By Thanalakshmi V  |  First Published Nov 3, 2022, 12:21 PM IST

வட மாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதை அடுத்து, நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் விலை 5 காசுகள் உயர்ந்து 5 ரூபாய் 15 காசுகளாக நிர்ணியிக்கப்பட்டுள்ளது. 


நாமக்கலில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் முட்டை விலை உயர்வு குறித்து முடிவு செய்யப்பட்டது. அதன் படி, நேற்று முட்டை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகளாக இருந்த நிலையில், இன்று மேலும் 5 காசுக்கள் உயர்த்தப்பட்டு, 5 ரூபாய் 15 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சென்னை, ஹைதராபாத், விஜயவாடா, மைசூரு, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி ஆகிய மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சென்னை மண்டலத்தில் ஒரு முட்டை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளாக உள்ளது. 

Latest Videos

undefined

மேலும் படிக்க:பக்தர்களே அலர்ட் !! சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தடை.. இந்தெந்த நாட்களில் அனுமதி கிடையாது..

அதுபோல் கறிக்கோழி கிலோவிற்கு ரூ.115க்கும் முட்டைக்கோழி கிலோவிற்கு ரூ.95க்குள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவம் எடுத்து கொள்ள மாட்டார்கள் என்பதால், கடந்த மாதம் முட்டை, கோழி , ஆடு , மீன் ஆகியவற்றின் விலை கணிசமாக குறைந்தது.

இந்நிலையில் புரட்டாசி மாதம் முடிந்து ஜப்பசி மாதம் தொடங்கி இரு வாரங்கள் ஆகி விட்டதால், முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் அதன்விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:வெளுத்து வாங்கும் மழை.. கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. கும்பக்கரை அருவில் குளிக்க தடை..

click me!