கொரோனா எதிரொலி..! தமிழகத்தில்... முட்டை விலை கடும் வீழ்ச்சி..! 

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் இந்தியாவிலும் இருவர்பாதிக்கப்பட்டு  உள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. 

அந்தவகையில் நேற்று துபாயிலிருந்து தெலுங்கானா வந்த ஒருவருக்கும், இத்தாலி சென்று டெல்லி திரும்பிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஒரு நிலையில், கொரோனா எதிரொலியால் அசைவ உணவை எடுத்துக் கொள்வதில் மக்கள் தயக்கம் காண்பிக்கின்றனர். சமீபத்தில் சிக்கன் எடுத்துக்கொண்டாலும் கொரோனா வைரஸ் மிக எளிதாக தாக்கும் எனவும், கோழியில் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது எனவும் வதந்தி பரப்பப்பட்டது. இப்படி ஒரு நிலையில் முட்டை எடுத்துக்கொண்டாலும் பிரச்சனை என மக்கள் மத்தியில் ஒரு கருத்து பரவவே, இந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு முட்டை விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் படி, நாமக்களில் முட்டை கொள்முதல் விலை இந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு 20  பைசா குறைந்து ரூ. 3.28  க்கு விற்கப்படுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.