நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி(40). இவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது.
நாமக்கல்லில் கூலி வேலை செய்து வந்த பெண்ணை கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து, அந்த பாம்பை டப்பாவில் அடைத்து ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி(40). இவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது. உடனடியாக அவருடன் வேலை செய்து கொண்டிருந்த மற்றவர்கள் அந்த பாம்பை லாவகமாக பிடித்து டப்பாவில் அடைத்து வைத்தனர்.
undefined
இதையும் படிங்க;- கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம்..! காவல்துறை அதிரடி நடவடிக்கை
அதேநேரம் ரேவதியை சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, மருத்துவர்கள் எந்த வகை பாம்பு கடித்தது என ரேவதியிடம் கேட்டுள்ளனர். அதற்கு டப்பாவில் இருந்த பாம்பை மருத்துவர்களிடம் ரேவதி காண்பித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, பாம்பு கடித்த ரேவதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- நீ என்னோடு உல்லாசமா இருக்க வரல.. உங்க அம்மா அப்பாவை கொலை பண்ணிடுவேன்.. இறுதியின் கள்ளக்காதலன் செய்த பகீர்