ராசிபுரத்தில் வரலாறு காணாத மழை.. நீரில் மிதக்கும் அரசு மருத்துவமனை.. நோயாளிகள் கடும் அவதி..!

By vinoth kumar  |  First Published Aug 29, 2022, 9:34 AM IST

ராசிபுரத்தில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்ததால் அரசு மருத்துவமனையில் மழைநீர் புகுந்து நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 


ராசிபுரத்தில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்ததால் அரசு மருத்துவமனையில் மழைநீர் புகுந்து நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததிருந்தது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பாளையம், பட்டணம், முத்துகாளிப்பட்டி, குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத வகையில் 4 மணிநேரத்திற்கு மேலாக விடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று ஒரேநாளில் 20 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஒன்ஸ்மோர் கேட்டு பேராசிரியர் அடம்! நீங்க கொடுக்குற பணத்துக்கு ஒரு தடவைதான்!ஒரு நாள் முழுவதும் இல்லை கூறிய பெண்

இதனால், 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக  காட்சி அளித்தது. குறிப்பாக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளை ஊழியர்கள் பத்திரமாக மாற்று அறைக்கு கொண்டு சென்றனர். சிறிது நேரம் பெய்த கனமழைக்கே அரசு மருத்துவமனை முழுவதும் மழை நீர் தேங்கியதால் நோயாளிகள் பெறும் சிரமத்திற்கு ஆளாகினர். 

தொடர் மழையின் காரணமாக காய்கறி கடைகளில் இருந்த காய்க்கறிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முழுவதும் மழைநீர் சூழ்ந்ததால் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் இரவு முழுவதும் காத்து கிடந்தனர். 

இதையும் படிங்க;-  வேலம்மாள் பாட்டி வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய போட்டோகிராபருக்கு நேர்ந்த கதி..!

click me!