பேய் பிடித்த பெண்கள்.. விரட்டியடித்த காட்டேரி.! சூனியம் போக்கும் திருவிழா !!

By Raghupati R  |  First Published May 28, 2022, 12:05 PM IST

காட்டேரி வேடம் அணிந்த நபர் ஒவ்வொரு வீதியாக சென்று பில்லி,  சூனியம் வைக்கப்பட்டு உள்ள பெண்கள் பேய் பிடித்த பெண்கள் என கண்டறிந்து அவர்களை புதிய முறத்தாலும்,  சாட்டையால் அடித்து காட்டேரி ஓட்டும் வினோத திருவிழாவில் ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


பில்லி, சூனியம் திருவிழா

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாள்,  ஸ்ரீ செல்லியம்மன்,  ஸ்ரீ மாரியம்மன் ஆலய தேர் திருவிழாவானது  29- 4 - 2022 துவங்கி 30 - 5 - 2022 வரை சுமார் 1 மாதம் காலம் நடைபெறும். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 18 பட்டி கிராம மக்கள் கலந்து கொள்வார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மற்றும் காட்டேரி ஒட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Latest Videos

undefined

இதில் காட்டேரி வேடம் அணிந்த நபர் ஒவ்வொரு வீதியாக சென்று பில்லி,  சூனியம் வைக்கப்பட்டு உள்ள பெண்கள் பேய் பிடித்த பெண்கள் என கண்டறிந்து அவர்களை புதிய முறத்தாலும்,  சாட்டையால் அடித்து காட்டேரி ஓட்டும் வினோத திருவிழாவில் ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கடந்த 20 ஆண்டுகளாக இருதரப்பினர் இடையே இருந்த பிரச்சினை காரணமாக இந்த திருவிழா நடைபெறாமல் இருந்தது. 

ராசிபுரம்

இந்நிலையில், சுமுகமாக பிரச்சனை தீர்வு காணப்பட்டதை அடுத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இங்கு திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திருவிழா என்பதாலும்,  ஊர் மக்கள் அனைத்து செல்வங்களை பெற்று வாழ வேண்டும் என்பதற்காக இந்த காட்டேரி ஓட்டுதல் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெறுவதாக ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : PMK : பாமக தலைவர் ஆகிறார் அன்புமணி.! அப்போ ஜி.கே மணி நிலைமை ? பக்கா பிளான் போட்ட ராமதாஸ் !

இதையும் படிங்க : "ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!

click me!