நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் தேவிபிரியா. இவரின் கணவர் அருள்லால். இவர்களுக்கு மோனிகா ஸ்ரீ(18) என்ற மகள் உள்ளார்.
நாமக்கல் ராசிபுரம் 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் குடும்படுத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் தேவிபிரியா. இவரின் கணவர் அருள்லால். இவர்களுக்கு மோனிகா ஸ்ரீ(18) என்ற மகள் உள்ளார். இந்நிலையில், திமுக பெண் கவுன்சிலர் தேவிபிரியாவின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னை மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இந்த பகுதிகளில் 5 நேரம் மின்தடை..!
இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், 18 வயது மகள் விஷம் குடித்து தற்கொலை கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- வழக்கு விசாரணையில் தலையிட முடியாது.. திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்.!
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளுங்கட்சியை சேர்ந்த திமுக பெண் கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.