விண்ணப்பத்தில் கையெழுத்து சரியில்லை என படிவத்தை கிழித்து விவசாயி முகத்தில் வீசிய அதிகாரி

By Velmurugan sFirst Published Jun 8, 2023, 11:16 AM IST
Highlights

கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதாரில் தனது பெயர் தவறாக உள்ளது என்பதால் அதை திருத்தவதற்கான படிவத்தை கொண்டு சென்று கொடுத்த போது கணினி பிரிவில் இருந்த அதிகாரி இது சரியில்லை என கூறி கண் முன்னால் கிழித்து தூக்கி எறிந்ததால் விவசாயி அதிர்ச்சி.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு பகுதியில் வசித்து வருபவர் ராஜகோபால். விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி குமாரி என்பவரின் பெயர் ஆதார் அட்டையில் தவறாக உள்ளது என்பதால் அதை திருத்தி பெயர் மாற்றம் செய்வதற்காக கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கணினி மையத்தை அணுகி உள்ளார்.

ஆதார் திருத்துவதற்கான படிவத்தில் தான் அரியூர் நாடு பகுதியில வசிப்பதற்கான அத்தாட்சியை அரியூர்நாடு தலைவர் நாகலிங்கத்திடம் ஒப்புதல் பெற்று கையெழுத்து பெற்று சென்றுள்ளார். ஆதார் படிவத்தைப் பெற்ற கணினி அதிகாரி படிவத்தில் கையெழுத்து  சரியில்லை எனக் கூறி திருப்பித் தராமல் விவசாயம் கண்முன்னே கிழித்து தூக்கி எறிந்ததைக் கண்டு விவசாய அதிர்ச்சி அடைந்து அரியூர் நாடு தலைவருக்கு இது சம்பந்தமான தகவலை தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக விவசாயி கூறுகையில் தன் படிவம் சரியில்லை என்றால் என்னிடம் திருப்பிக் கொடுக்கலாம் அல்லது திருத்திக் கொண்டு வாருங்கள் என கூறாமல் அதிகாரி தன்னிச்சையாக என் கண் முன்னே கிழித்துப் வீசியது வேதனை அளிக்கிறது. இவர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அசுர வேகத்தில் வந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து; 2 பேர் பலி, 2 பேர் படுகாயம்

கடந்த நான்கு நாட்களாக விவசாய கூலி வேலைக்கு செல்லாமல் வருமான இழப்பு ஏற்பட்டு வட்டாட்சியர்  அலுவலகத்திற்கு அலைவதாகவும் இந்நிலையில் படிவத்தை கிழித்து எறிந்ததால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரியின் இந்த நடவடிக்கை மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பந்து விளையாடிய 10 வயது சிறுவன்: சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இதுகுறித்து அரியூர் நாடு தலைவன் நாகலிங்கம் கூறுகையில் தான் கையெழுத்திட்ட படிவம் தவறாக உள்ளது என்றால் எனக்கு போன் செய்து கூறலாம் அல்லது வாட்ஸ் அப் மூலம் அனுப்பி விவரம் கேட்கலாம் இது எதையுமே செய்யாமல் தன் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் விவசாயிகள் கொண்டு வரும் ஆதார் திருத்த படிவம்,மாணவ மாணவிகள் கொண்டு வரும் விண்ணப்ப படிவங்களை கிடப்பில் போடுவது வேதனைக்குரிய செயலாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் தமிழக முதல்வரும் இதை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

click me!