ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகைக்கு தீ வைத்த விவகாரத்தில் 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழப்பு.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசை முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த 4 வட மாநில தொழிலாளர்களில், 3 வட மாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
4 தொழிலாளர்களும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதி வாக்கு மூலம் வாங்கிச் சென்றார். அதனைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அந்த பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கோவையில் பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் காட்டு யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் பலி
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஒடிசாவை சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைகாக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த வடமாநில தொழிலாளர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சொத்துக்காக உடன் பிறந்த அண்ணனை கொலை செய்த தம்பி, தங்கை உட்பட 9 பேர் கைது