பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நின்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின் பக்கத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மோர்பாளையம் அருகே வட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கவிதா, இவர்களது உறவினர்களான கந்தாயி, குஞ்சம்மாள், மகாலட்சுமி , சாந்தி மற்றும் கவிதாவின் தம்பி மகள் ஆகியோர் வீரப்பூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். காரை ரவி ஓட்டி வந்தார்.
இதையும் படிங்க;- இனி கால அவகாசம் கிடையாது.. மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்..!
அப்போது, பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நின்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின் பக்கத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரவி மற்றும் குழந்தை லக்சனா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க;- இன்னும் என்னுடைய ஆட்டம் முடியல.. சைலண்ட் மோடில் இருந்து கொண்டே இபிஎஸ்க்கு ஆப்பு வைக்கும் ஓபிஎஸ்?
இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோவில் திருவிழாவிற்கு சென்று ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.